இந்திய விமானப்படைத் தலைமை தளபதி ஏ. பி. சிங், “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது பாகிஸ்தான் விமானப்படையின் ஐந்து போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக தெரிவித்தார். சுமார் 300 கிலோமீட்டர் தூரத்திலிருந்து ஏவுகணை மூலம் அந்தப் பெரிய விமானம் குறிவைக்கப்பட்டதாகவும், இது இந்திய விமானப்படையின் இதுவரை நடைபெற்ற மிக நீண்ட தூரத் தாக்குதலாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். “ஆபரேஷன் சிந்தூர்” தொடர்பான தகவலை இந்திய விமானப்படைத் தலைவர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துவது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.
அவர் வெளியிட்ட தகவலில், பயங்கரவாத முகாமொன்றைத் தாக்கியதற்கான புகைப்பட ஆதாரங்களும் இடம்பெற்றிருந்தன. மேலும், இந்திய எல்லைக்குள் விழுந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் பாகங்கள் கைப்பற்றப்பட்டு தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“ஆபரேஷன் சிந்தூர்” இலச்சினையை வடிவமைத்த இரண்டு ராணுவ வீரர்கள் குறித்து புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. சமீபத்தில் வாங்கப்பட்ட எஸ்-400 பாதுகாப்பு அமைப்பு சிறப்பாக செயல்பட்டதால், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முடியவில்லை எனவும் அவர் விளக்கினார்.
இதே நேரத்தில், “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில் பாகிஸ்தானின் எந்தவொரு விமானமும் இந்தியாவால் வீழ்த்தப்படவில்லை என அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.



Leave a Reply