மதுரை அருகே, சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளிவாசல் முன்பு ஆபத்தான நிலையில் நிழற் குடை இருப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ஆகையால், நிழற்
குடையை அகற்றி புதிய நிழற் குடை கட்டித் தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், பள்ளிவாசலுக்கு வரும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பள்ளிவாசல் பகுதியில் சுகாதார வளாகம் கழிப்பறை வசதி கட்டித் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.



Leave a Reply