வனவிலங்கு வாரத்தை முன்னிட்டு கோவை ஆனைகட்டி பகுதியில் சலீம் அலி பறவையியல் மற்றும் வரலாற்று மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கடந்த ஒரு வார காலமாக வனவிலங்கு வாரத்தை கொண்டாடி வருகின்றது, இதனையடுத்து அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஆனைகட்டி நிகழ்ச்சியில் மனித–வனவிலங்கு மோதலைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. யானைகள் மனிதர்களுடன் மோதல்களை தவிர்க்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதையும் விளக்கும் பிரசுரங்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
இந்த பேரணியில் பறவைகள் மற்றும் வனவிலங்கு ஆய்வாளர்கள், பணியாளர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆனைகட்டி பேருந்து நிறுத்தம் அருகே துவங்கிய பேரணி சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தை கடந்து தனியார் மருத்துவமனை அருகே நிறைவு பெற்றது.
இந்த நிகழ்ச்சி மூலம் பொதுமக்களில் வனவிலங்குகளுடன் பாதுகாப்பான நடத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே முதன்மை நோக்கம் ஆகும்.



Leave a Reply