என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என,
கோவை ஆட்சியர்,கமிஷனரிடம்கே.ஆர்.ஜெயராம்எம்எல்ஏ மனு என் பெயருக்கும், மதிப்புக்கும் களங்கம் ஏற்படுத்தி வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவலியுறுத்தி ஆட்சியர், போலீஸ் கமிஷனரிடம் சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம் மனு அளித்தார். இதுகுறித்து ஆட்சியரிடம் அளித்தமனுவிவரம்:
அ.தி.மு.க.வைச் சேர்ந்த நான் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்டு மக்கள் சேவை செய்து வருகின்றேன். எனது பொதுநல பணிகள் காரணமாக பொதுமக்களிடம் மதிப்பும், மரியாதையும் இருக்கிறது. அத்துடன் நான் பல ஆண்டாக முறையாக சட்டப்படி ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகின்றேன். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக நான் ஒருவரின் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாகவும், அது தொடர்பாக நான் அவர்களை மிரட்டி வருவதாகவும் கூறி சிலர் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள். அத்துடன் அவர்களின் பின்புலத்தில் சிலர் இருந்து நான் மக்கள் பணியாற்ற இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்று பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர்.
இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது 10-க்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் என் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதாககவும் அவதூறு பரப்பி வருகின்றனர்.. என் மீது அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகள்தான் நிலுவையில் இருக்கிறது. அந்த நபர்கள் கூறும் பெயர் கொண்டவர்கள் எனக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள்.
எனவே அவர்கள் கூறும் பிரச்சினைக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அத்துடன் அவர்கள் இந்த பிரச்சினையில் எவ்வித ஆதாரமும் இல்லாமல் என பெயரை பயன்படுத்தி களங்கம் ஏற்படுத்தி உள்ளனர். எனவே என் பெயருக்கும், மதிப்புக்கும் களங்கம் ஏற்படுத்தி வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதே மனுவை அவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்தும் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவருடன் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Leave a Reply