ஆடிபூரத்தை முன்னிட்டு சாரதாம்பாள் கோவிலில் 1 லட்சத்து 25 ஆயிரம் வளையல்களால் சிறப்பு அலங்காரம்

Spread the love

ஆடிபூரம் திருநாளையொட்டி கோவையின் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைந்து உள்ள சாரதாம்பாள்அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆடிப் பூரத்தை முன்னிட்டு கோவிலில் அம்மனுக்கு ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் வளையல்களால் கோபுரம் முதல் சன்னதி வரையிலான பகுதி வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டது.

இந்த வண்ண வளையல் அலங்காரம் பக்தர்களின் பார்வையை ஈர்த்தது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்ததாகக் கருதப்படும் மாதமாக இருப்பதால், நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.