ஆகஸ்ட் 29ல் நடைபெறுகிறது விஷால் – சாய் தன்ஷிகா திருமணம்

vishal saidhanshika
Spread the love

நடிகர் விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகா திருமணம் ஆகவிருக்கிறது என்ற தகவல் இன்று அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.

சாய் தன்ஷிகா நடித்துள்ள ‘யோகிடா’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் விஷால், திரைப்பட ட்ரெய்லரை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்த விழாவில் மேடையில் உரையாற்றிய சாய் தன்ஷிகா, தனது திருமணம் விஷாலுடன் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனுடன், இணையத்தில் பரவிய வந்த தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ உறுதிப்பத்திரம் கிடைத்ததாகக் கூறலாம்.

விஷால் – தன்ஷிகா காதல் குறித்து கடந்த சில வருடங்களாகவே பேச்சுகள் எழுந்தன. இருவரும் ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்த நிலையில், அது பின்னர் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. விஷால் இதற்கு முன்பு நடிகர் சங்க கட்டிடம் முடிந்த பிறகே திருமணம் செய்வேன் என தெரிவித்திருந்தார். இதையடுத்து பலரும் அவரது திருமணம் குறித்து ஆவலுடன் இருந்தனர்.

‘கபாலி’, ‘பரதேசி’, ‘பேராண்மை’ போன்ற சிறப்பான திரைப்படங்களில் தனது திறமையை நிரூபித்துள்ள சாய் தன்ஷிகாவும், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.