கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்து, கட்சியின் உள்நிலை மற்றும் தனது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து முக்கியமான கருத்துகளை பகிர்ந்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
“நான் 53 ஆண்டுகளாக அ.தி.மு.க.வில் இருக்கிறேன். தனிப்பட்ட முறையில் என்னை யாரும் இயக்க முடியாது. தற்போது அ.தி.மு.க.வில் இ.பி.எஸ். குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மகன், மைத்துனர், மருமகன் என அனைவரும் கட்சித் துறைகளில் தலையிடுகின்றனர். இது மூத்த நிர்வாகிகளுக்கும் கட்சியின் இயல்பான செயல்பாட்டிற்கும் இடையூறாக உள்ளது,” என அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், “மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் இணைந்தது அவரது விருப்பம். அ.தி.மு.க.வில் பலரிடம் நான் தொடர்ந்து பேசி வருகிறேன். ஆனால் யார் யாரிடம் பேசுகிறேன் என்பதை தெரிவித்தால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும். எனவே அதை வெளிப்படுத்த விரும்பவில்லை. எனது அடுத்தகட்ட நகர்வுகளால் நல்லதே நடக்கும்,” என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கூறிய அவரது கருத்துகள் அ.தி.மு.க. உள்நிலை அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.



Leave a Reply