இந்த நாட்டின் தலைநகர் பியாங்யாங். தலைநகர் பியாங்யாங்கில் இருந்து வீடற்ற மக்கள் , பிச்சைக்காரர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். இந்த காலக்கட்டத்தில் நாட்டில் கடுமையாக பஞ்சம் நிலவியது. இதனால் , ஒரு வேளை சோற்றுக்கே மக்கள் அலை மோதும் நிலை ஏற்பட்டது. அப்போது, நாட்டின் வயது முதிர்ந்த மக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு இறந்தார்கள். பண்டைய தமிழகத்தில் வடக்கு இருந்து உயிர் இறத்தல் என்ற ஒரு வழக்கம் இருந்தது. அதாவது, போரின் போது, புறமுதுகில் புண்பட்டால் அவமானமாக கருதி தமிழர்கள் வடக்கு நோக்கி இருந்து உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் பட்டினி கிடந்து உயிரை மாய்த்துக் கொள்வார்கள். அதே போலவே, தன் வம்சாவளி தொடர வேண்டுமென்றால் தாத்தா உண்ணா நோன்பிருந்து இறந்து தன் வம்சத்தை காக்கும் நிலை வட கொரியாவில் ஏற்பட்டது.
கடந்த 1941 ஆம் ஆண்டு வடகொரியாவின் தந்தை என்று அழைக்கப்படும் இரண்டாம் கிம் சங் மறைய அவரின் மகன் இரண்டாம் கிம் ஜாங் பதவிக்கு வந்தார். இவர்தான், தற்போதைய வட கொரிய அதிபரும் விளையாட்டுப் பிள்ளையுமான கிம் ஜாங் உன்னின் தந்தை. கடந்த 2011 ஆம் ஆண்டு இரண்டாம் கிம் ஜாங் மறைந்ததும் கிம் ஜாங் உன் வடகொரிய அதிபர் ஆனார். அதாவது, இது ஒரு குடும்ப ஆட்சி கம்யூனிச ஆட்சி முறை ஆகும். மக்களை பல்வேறு வகையில் இந்த குடும்ப ஆட்சி கட்டுப்படுத்தியது. என்ன படிக்க வேண்டும், எப்போது படிக்க வேண்டும். படித்து முடித்து விட்டு என்ன வேலை பார்க்க வேண்டும் … அவ்வளவு ஏன்… முடி கூட எப்படி வெட்ட வேண்டும் என்பதற்கு அரசுதான் விதிமுறை வகுத்துள்ளது. வடகொரியர்கள் அரசு விதித்துள்ள 15 முறைகளின்படிதான் முடியை வெட்ட வேண்டும். ஆனால், இந்த விதிகள் எதுவும் கிம் ஜாங் உன்னை கட்டுப்படுத்தாது. மக்களுக்கு மட்டும்தான் விதிமுறைகள்.அதோடு, இன்டர்நெட்டில் இருந்து செல்போன் வரை கண்காணிக்கப்படும். கல்லூரி படிப்புக்கு பிறகு, 10 ஆண்டுகள் கட்டாயம் ராணுவத்தின் பணி புரிந்தே ஆக வேண்டும். அரசியல் என்று எடுத்துக் கொண்டால் வடகொரியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாளுமன்ற தேர்தலும் நடத்தப்படும். இதில், ஆளும் தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர்கள் மட்டும்தான் போட்டி போடுவார்கள். மக்கள் அவர்களுக்கு மட்டும்தான் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பு 99.9 சதவீதம் இருக்கும். அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால், தேச துரோக வழக்கு பாய்ந்து விடும். வாக்களிப்பின் போது, அதை ரகசிய கணக்கெடுப்பாகவும் வடகொரியா வைத்துள்ளது. இந்த நாட்டில் ரகசிய போலீஸ் உள்ளது. இந்த போலீசுக்கு பயந்து அனைவரும் வந்து வாக்களித்து விடுவார்கள்.
((வடகொரியாவில் ஆண்கள் எப்படி முடி வெட்டி கொள்ள வேண்டும்: பெண்கள் லிப்ஸ்டிக் பூசிக் கொள்ளலாமா? பார்ப்போம் அடுத்த வாரம்))
Leave a Reply