, ,

அவினாசியில் ரோட்டரி சங்கம் சார்பில் உலக போலியோ ஒழிப்பு தினம் பேரணி

rotary club
Spread the love
ரோட்டரி அவிநாசி கிழக்கு, ரோட்டரி மெட்டல் டவுன்,ரோட்டரி அவிநாசி, ரோட்டரி சேவூர், ரோட்டரி திருப்பூர், ரோட்டரி மெரிடியன், ரோட்ராக்ட் அவிநாசி கிழக்கு இணைந்து  உலக போலியோ ஒழிப்பு தினம் பேரணி ஏற்பாடு செய்திருந்தனர். இப்பேரணியை மாவட்ட ஆளுநர் டாக்டர் சுரேஷ் பாபு தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினர் கே.பூபதி (டிஜிஎன்), மாவட்ட பொது செயலாளர் டி.ஜெயராமன் அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில்  தொடங்கி அவிநாசி கிழக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி அவிநாசி இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து புதிய பேருந்து நிலையத்தில் முடிவு பெற்றது. இதற்கு உறுதுணையாக  சங்க தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.