கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தின் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளின் போது, ஹோப் காலேஜ் பகுதியில் ரயில்வே பாலத்திற்கும் மேல் இரும்பு மேல்தளம் அமைத்து மேம்பாலத்தை இணைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், ஜூலை 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை தினமும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை பயனியர் மில் சந்திப்பு முதல் கோவை மருத்துவக் கல்லூரி வரை இருபுறமும் அனைத்து வாகனங்களுக்கும் போக்குவரத்து தடை விதிக்கப்படுகிறது.
போக்குவரத்து மாற்ற விவரங்கள்:
-
மாநகரிலிருந்து வெளியேறும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் லட்சுமி மில்ஸ் சந்திப்பில் இருந்து வலதுபுறம் திரும்பி, ராமநாதபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் வழியாக எல் அண்ட் டி பைபாஸ் சாலை அல்லது காந்திபுரம், கணபதி, சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, காளப்பட்டி வழியாக அவிநாசி சாலையை அடையலாம்.
-
மாநகருக்குள் வரும் கனரக வாகனங்கள் மற்றும் ஆம்னி பேருந்துகள் தொட்டிப்பாளையம் பிரிவில் இருந்து வலதுபுறம் திரும்பி, தொட்டிபாளையம், காளப்பட்டி, விளாங்குறிச்சி, சரவணம்பட்டி வழியாகவோ அல்லது சிட்ரா சந்திப்பில் இருந்து ‘யூ டர்ன்’ செய்து நகருக்குள் வரலாம்.
-
மாநகரில் இருந்து வெளியேறும் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பயனியர் மில் சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பி, ரொட்டிக்கடை மைதானம், காந்தி மாநகர், தண்ணீர் பந்தல், டைடல் பார்க் வழியாக அவிநாசி சாலையை அடையலாம்.
-
மாநகருக்குள் வரும் கார்கள் மற்றும் பைக்குகள் சித்ரா, கொடிசியா, சி.எம்.சி சந்திப்புகளில் இருந்து வலது புறம் திரும்பி டைடல் பார்க், தண்ணீர் பந்தல், காந்திமாநகர், ரொட்டிக்கடை மைதானம், பயனியர் மில்ஸ் வழியாக நகருக்குள் வரலாம்.
-
சிங்காநல்லூருக்கு செல்லும் வாகனங்கள் எல் அண்ட் டி பைபாஸ் சாலை வழியாக சிந்தாமணி புதூர் மற்றும் ஒண்டிப்புதூர் வழியில் செல்லலாம்.
-
சிங்காநல்லூரில் இருந்து ஹோப்ஸ் செல்லும் வாகனங்கள் பெர்க்ஸ் பள்ளி, ஜி.வி.ரெசிடென்சி, பன்மால் வழியாக பயனியர் மில்ஸ், காந்திமாநகர், தண்ணீர் பந்தல் வழியாக அவிநாசி சாலையை அடையலாம்.
பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள், மாற்று வழிகளை பயன்படுத்தி உத்தரவாதமாக செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.
Leave a Reply