அலையன்ஸ் கிளப் (262 எஸ்) அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கோவை கொடிசியா அருகில் உள்ள ஜே. ஆர் ஆர்ச்சிட் அரங்கில் நடைபெற்றது. அலையன்ஸ் புதிய மாவட்ட ஆளுநராக ரகுராமன் பதவியேற்றார். அவருடன் முதல் துணை ஆளுநராக காளியப்பன், இரண்டாம் துணை
ஆளுநராக மாஸ் அரங்கநாதன், மூன்றாம் துணை ஆளுநராக அருண்குமார் ஆகியோரும் பதவி ஏற்றனர்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பன்னாட்டு தலைவர் பாலச்சந்திரன் பங்கேற்று நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அன்னதானம், மரம் நடுதல், குழந்தைகள் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பேரணி, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், அரசு பெண்கள் பள்ளிக்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ள உள்ளதாக அலையன்ஸ் புதிய மாவட்ட ஆளுநர் ரகுராமன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் லீடர்ஷிப் இன்ஸ்டியூட் தலைவர் கள்ளழகர், பன்னாட்டு செயலாளர் சீனிவாசகிரி, தென்னிந்திய கூட்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீ மகேஷ் குமார், பன்னாட்டு குழுத் தலைவர் மின்னல் சீனிவாசன் தென்னிந்திய கூட்டு மாவட்ட துணை தலைவர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply