, , ,

அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் மத அடிப்படையில் பணி நியமனங்கள் செய்யக்கூடாது..! – உயர்நீதிமன்றம் உத்தரவு

Madras-High-Court
Spread the love

தமிழ்நாட்டில் ‘அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் மத அடிப்படையில் பணி  நியமனங்கள்  செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே டெல்லி உயர்நீதிமன்றம் ‘அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில்  பணி நியமனம் தொடர்பாக அரசு அதிகாரிகளின் ஒப்புதல் பெற வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், தற்போது உயர்நீதிமன்றம் மதுரை கிளை மத அடிப்படையில் பணி  நியமனங்கள்  செய்யக்கூடாது  என உத்தரவிட்டுள்ளது.