மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆன்லைன் டாக்ஸி சேவைகளுக்கான கட்டண முறையில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. புதிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில், ஓலா, உபர், ராப்பிடோ போன்ற ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனங்கள் பரபரப்பான (பீக்) நேரங்களில் அடிப்படை கட்டணத்தின் 2 மடங்கு வரை கட்டணம் வசூலிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்குமுன், இந்த வரம்பு 1.5 மடங்கு வரை மட்டுமே இருந்தது.
அதேசமயம், பயண தேவைகள் குறைவாக இருக்கும் நேரங்களில், அதாவது அவசரமில்லாத நேரங்களில், அடிப்படை கட்டணத்தில் 50% வரை குறைத்து வசூலிக்கலாம் என்றும் புதிய வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த மாற்றங்கள் டிஜிட்டல் போக்குவரத்து துறையில் ஒழுங்குமுறைமைக்கான ஒரு நடவடிக்கையாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. பயணிகள் தேவைக்கு ஏற்ப கட்டணங்களை மாற்றுவது, சேவை வழங்குநர்களுக்கு வணிக ரீதியாக நியாயமான வருமானத்தை உறுதி செய்வதற்காகவும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகள் இந்த வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொள்வதே இந்நடவடிக்கையின் அடுத்த கட்டமாகும். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள போக்குவரத்து அதிகாரிகளின் ஒப்புதலுடன் தான் இவை நடைமுறைக்கு வரும். எனவே பயணிகள் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் எதிர்காலத்தில் கட்டணங்களில் குறிப்பிடத்தக்க வித்தியாசங்களை எதிர்பார்க்கலாம்.
Leave a Reply