தமிழ்நாடு அரசின் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமுக்காக அரசு பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கியதற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவில்,
திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே தாமலேரி முத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு திமுக அரசின் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமுக்காக இன்று விடுமுறை அளித்திருப்பதாகவும், இதனால் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை மேலும், “நான்கு ஆண்டுகளாக எந்தத் துறையையும் சரிவர நிர்வகிக்காமல் விளம்பரங்களிலேயே ஆட்சியை செலவிட்ட திமுக அரசு, தற்போது ஆட்சிக் காலம் முடிவடையும் நிலையில் கண்துடைப்பு முகாம்கள் நடத்தி அரசுத் துறைகளை முடக்கி வருகிறது” எனவும் விமர்சித்துள்ளார்.
அதேபோல், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாது என உறுதியளித்திருந்தும், அதை மீறி மீண்டும் அரசு பள்ளிகளில் விடுமுறை வழங்கப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



Leave a Reply