கோவை நேரு நகர் பகுதியில் தி.மு.க மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சீமான் என்ற போலி பிம்பம் வன்மத்தால் கட்டமைக்கப்பட்டு உள்ளது என்பது தோலுரித்து காட்ட பட்டு உள்ளது.
ஈழம் என்கிற அரசியல் 1970-க்கு பிறகு தமிழகத்தில் பல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பினர் ஈழத்திற்கு சென்று வந்தாலும் எவ்வித மாறுபாடும் ஏற்படவில்லை ஆனால் சீமான் சென்று வந்த பிறகு தமிழீழ மண் ஒட்டுமொத்த மண் அழிக்கப்பட்டது. சீமான் தமிழீழ விவரங்களை பன்னாட்டு கொடுத்தால் 2009-ல் தமிழீழம் அழிக்கப்பட்டது. தற்போது வெளிவரும் ஆதாரங்கள் மன இறுக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. யாரை நம்புவது என்ற மிகப்பெரிய சிக்கலை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீமான் என்கிற பொய்யன், தற்குறி தமிழினத்துக்கு, மிகப்பெரிய கட்டுக் கோப்பாக இயங்கிய இயக்கம் விடுதலை புலிகள், ஈழத்தில் நடந்தது என்ன என்று ஏன் பேசவில்லை 2008-ல் சிறையில் இருந்து வெளியில் வந்த சீமான் நேரடியாக போராட்ட களத்திற்கு வரவில்லை. நேரடியாக மாயாண்டி குடும்பத்தார் என்னும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றார்.. தன்னிடம் தான் போராட்டம் ஒப்படைக்கபட்டது என்றால் ஏன் போராட்ட களத்திற்கு செல்லவில்லை. போராட்டங்கள் உச்சத்தில் இருந்த போது மூன்று மாதங்கள் சீமான் எங்கே போனார்.
சூசேவிடம் பேசிய ஐந்து நிமிட ஆடியோவை சந்தோஷ் அனைத்து சமூக ஊடகங்களிலும் சீமானுக்கு தமிழீழம் குறித்த புரிதல் இல்லை. தமிழகத்தில் இருந்த எழுச்சியை சிங்கள அரசுக்கு பரப்பாமல் தமிழீழத்தை நீர்த்து போக செய்து இருக்கிறார்கள். தமிழீழத்தை காட்டி கொடுத்தது மட்டுமல்லாமல் தமிழகத்தில் இருந்த எழுச்சியை நீர்த்து போக செய்திருக்கிறார்கள். பொதுவெளியில் சவால் விடுகிறேன் சமஸ்கிருத, இந்தி திணிப்பை விட பெரியார் திணிப்பு என சீமான் தனது வாட்ஸ் ஆப் ஸ்டேஸாக வைத்து உள்ளார்
அவர் ஆர்.எஸ்.எஸ்.ஐ விட ஆபத்தானவர் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய அசிங்கம் சீமான். ஈழத்தில் நிதி வந்தது என கூறுவது பொய். சுரண்டி இருக்கிறார். சுய லாபத்திற்காக பயன்படுத்தி இருக்கிறார். பிரபாகரனுடன் சீமான் சந்தித்தது இரண்டில் இருந்து எட்டு நிமிடங்கள் வரை தான்.ஒழுக்கேடான வாழ்க்கையால் , இவரது ஊதாரித்தனத்தால் தமிழீழ விடுதலை புலிகள் ஒதுக்கினார்கள். ஈரோடு இடைத் தேர்தலில் சீமான் டெபாசிட் கூட வாங்க முடியாது. பெங்களூர் விமானத்தில் தான் சென்றார். போர் விமானத்தில் தான் சென்றதாக பொய் கூறுகிறார்.
பெரியாரை குறித்து பேசியவர் அடுத்து அம்பேத்கர் குறித்து பேசுவார். சீமான் எல்லா கெட்ட வார்த்தை பேசுவது தான் செந்தமிழ் என கூறுவார். அறம் என்பது சீமானுக்கு கிடையாது. அவர் தமிழர் அடையாளங்களை அழிக்க வந்த கைக்கூலி. பிரபாகரன் என்ற போராளியை ஒரு செஃப்-ஆக மாற்றி வைத்து இருக்கிறார். சீமான் பா.ஜ.க வால் இயக்கபடுகிறார் என உறுதியாக நம்புகிறேன். சீமான் தனது சுகபோக வாழ்வுக்காக இளைஞர்களின் உழைப்பை சுரண்டுகிறார்.சீமானுக்கு அரசியல் அங்கீகாரம் விஜய்யால் தான் கிடைத்தது.” என்று பேசினார்
Leave a Reply