அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் – அட்சதை வழங்கிய பாஜக வழக்கறிஞர் பிரிவினர்

bjp
Spread the love

அயோத்தியில் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அயோத்தியில் இருந்து கொண்டு வந்த அட்சதை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கோவை மாநகரில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அட்சதை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் பொருட்டு ராமநாதபுரம் மண்டலில் உள்ள பெரியார் நகரில் பாஜக வழக்கறிஞர் பிரிவு எம்.கலைச்செல்வன், ஆர்.பூர்ணிமா ரமேஷ், டி.காந்திமதி, ஆர்.புருஷோத்தமன், டி.மகாவிஷ்ணு, கே.கவிதா, ஏ.ரோஷன் ஆகியோர் வீடுகளுக்கு அட்சதை வழங்கினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் ஏ டி ராஜன் வணக்கம் கேபிள் பெரியசாமி மற்றும் பல பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.