அயோத்தி ராமர் கோயிலில் தரிசன நேரம் மாற்றம்: இரவு 8.30 வரை மட்டும் அனுமதி

Spread the love

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில் பக்தர்கள் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

முன்னர் அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு, காலை 7 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது வழக்கம். இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

புதிய மாற்றத்தின் படி, இனிமேல் இரவு 8.30 மணிவரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். அதன் பின்னர் நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், மதியம் 12.30 மணி முதல் 1 மணி வரை நடை தற்காலிகமாக அடைக்கப்பட்டு, பின்னர் 1 மணிக்கு மீண்டும் பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் அதிக நெரிசல் இல்லாமல் சீரான தரிசனம் பெறும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.