அதிமுகவில் சாதாரணமாக கட்சியில் சேர்ந்தவர்கள்தான் இன்று உயர்ந்தப்பதவிகளுக்கு வந்துள்ளோம். இது அதிமுகவில் மட்டுமே நடக்கும் அதிசயம் என கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலளருமான எஸ்.பி.வேலுமணி பெருமிதம் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வரும், கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” புரட்சி பயனம் இளைஞர்களிடையே புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. 2026 இல் தமிழகத்தில் அதிமுக தலைமையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த கோவையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே மாபெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக திமுக, அமமுக, தவெக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மற்றும் கல்லூரி மாணவர்கள் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். கோவை அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் கழக அம்மாபேரவை இணை செயலளர் முத்துவெங்கடேஸ் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கழகத்தில் இணைந்த அனைவருக்கும், சால்வைகள் அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி. மேலும் இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள். பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே அர்ச்சுணன், எம்.எஸ்.எம் ஆனந்தன்,வி.பி.கந்தசாமி, மற்றும் கழக கொள்கைபரப்பு துணை செயலாளர் தோப்பு அசோகன், மற்றும் கருப்புசாமி, பிரபாகரன், கார்த்திக் அப்புசாமி, சிவபிரசாத், டி.பி.வேலுச்சாமி, உட்பட கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது,
அண்ணாதிமுக மாபெரும் இயக்கத்தில் இணைய உள்ள அனைவரையும் வரவேற்கிறேன். நாங்களும் உங்களைபோல் சாதாரணமாக இந்த கட்சியில் சேர்ந்தவர்கள்தான். இன்று உயர்ந்தப்பதவிகளுக்கு வந்துள்ளோம். இது அதிமுகவில் மட்டுமே நடக்கும். இது அம்மா தொடங்கி வைத்த அதிசயம். இளைஞர்கள் கட்சியில் சேருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர்.ஆரம்பித்த கட்சி, 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி, அதிமுக ஆட்சியில்தான் மேம்பாலங்கள், சாலைகள், கூட்டுகுடிநீர் திட்டம் என்று பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். நீங்கள் இன்று கட்சியில் இணைகின்றீர்கள், உங்களின் தாய் தந்தையரை நன்றாக பார்த்துகொள்ள வேண்டும். நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம், தமிழகத்தில் எடபாடியாரின் எழுச்சி பயணம் வெற்றி பயணமாக அமைந்துள்ளது. செல்லுமிடமெல்லாம மக்கள் எழுச்சியுடன் தங்களது பேராதரவை அளித்து வருகிறார்கள்.மீண்டும் வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி. அதிமுக ஆட்சியில்தான் இளைஞர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். அதிமுக ஆட்சி அமைந்ததும் கோவை மாவட்டத்திற்கான அனைத்து திட்டங்களையும் செய்து கொடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Leave a Reply