கோவை அம்மா ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமின் துவக்கவிழா ஞாயிற்றுக்கிழமை அம்மா ஐ.ஏ.எஸ் அகாடமியில் நடைபெற்றது.அனைவரையும் நல்லறம் அறக்கட்டளை ஜி .கிருத்திகா வரவேற்று வரவேற்புரை நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.அன்பரசன் பேசுகையில் மாணவ,மாணவியர்களுக்கு தற்போது இதுபோன்ற பயிற்சிகளுக்கு வெளியில் மிக அதிக அளவில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.ஏழை எளிய மாணவ,மாணவியர்களும் தங்கள் வாழ்வினில் உயர்ந்த நிலைதனை அடையவே நம் நல்லறம் அறக்கட்டளை சார்பில் அம்மா ஐ.ஏ.எஸ் அகாடமி வழியாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு வழியாகவே நீட் பயிற்சி இலவசமாக அளிக்க துவங்கபட்டுள்ளது.இதனை அனைவரும் பயன்படுத்தி வாழ்வினில் உன்னத நிலைதனை அடைய வாழ்த்துகிறேன் என்றார்.

சிறப்பு விருந்தினர்களாக ஆதித்யா கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.அனுஜா,ஆர்.வி.எஸ் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ்.சந்திரிகா,,மகா கணபதி சுரேஷ் நலம் முந்திரிகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் இந்த பயிற்சியினை மாணவ,மாணவியர்களுக்கு சிறப்பாக கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.அன்பரசன் விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.



Leave a Reply