,

அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும்- கோவையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

premalatha vijayakanth
Spread the love

கோவையில் இன்று நடைபெற உள்ள பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,

தமிழ்நட்டில் கள்ளச்சாராயத்தால் 69 உயிர்களை இழந்துள்ள சூழலில் மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் மூத்த  அமைச்சர் சட்டமன்றத்தில் பேசும் போது சரக்கில் கிக் இல்லாததால் தான் மக்கள் கள்ளச்சாராயம் நோக்கி செல்கின்றார்கள் என்று மிக மிக ஒரு மோசமான பதிவை பதிய வைத்ததை தேமுதிக சார்பாக வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.முதலமைச்சர் முன்பு மூத்த அமைச்சர் சட்டமன்றத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் கிக்கு என்கின்றார் சரக்கு பற்றி பேசுகிறார் கிறுக்குத்தனமாக பேசுகிறார் எனவும் 69 உயிருக்கும் முழு சாட்சி நீங்கள்தான் என்பதை அவரே ஒற்றுக் கொண்டுள்ளார் என்பதைத்தான் இங்கு பார்க்க முடிகின்றது என்றும் குற்றம் சாட்டினார்.கள்ளச்சாராயம்  வரக்கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாடு முழுக்க டாஸ்மார்க் கடைகளை நடத்தி ஆண்டு முழுவதும் 45 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து மக்கள் உயிரை பணயம் வைத்து இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழகத்தையும் குடிகாரர்களாக மாற்றிய பெருமைதான் இந்த ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது என்றும் அதில் தரம் இல்லை என்பதை மூத்த அமைச்சர்கள் ஒத்துக் கொள்கிறார்கள் யார் கள்ளச்சாராயம் நோக்கி செல்ல வைக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது என்றும் குறிப்பிட்டார்.குடியை கொடுத்து கோடியை நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக கோடிக்கணக்கான மக்களின் உயிரை பணயம் வைத்துள்ளீர்கள் எனவும் கள்ளக்குறிச்சி மட்டுமல்லாமல்  பொள்ளாச்சியிலும் ஒரு நிகழ்வு நடந்தது உண்மையில் மனவருத்தமாக உள்ளதாகவும் இது தமிழ்நாடு முழுவதும் இருக்கும் நிலையில்  பொறுப்பில் இருக்கும் அமைச்சர்கள் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்து வாய் அடைத்து விடுகிறார்கள் என்றும் விமர்சித்தார். ஆனால் மூத்த அமைச்சர் நேற்று சட்டசபையில் சொல்லி உள்ளார் அவர்களாக திருந்தினாலே தவிர திருத்த முடியாது என்று சொல்கிறார் பிறகு எதற்கு இந்த ஆட்சி எல்லா இடங்களிலும் காவல் நிலையம் வைக்க முடியாது என்று சொல்பவர்களுக்கு எப்படி டாஸ்மார்க் மட்டும் வைக்க முடியும் போலீஸ் ஸ்டேஷன் வைக்க முடியாதா என்ற மக்கள் கேள்வியை நான் எழுப்புகிறேன் என்றார்.மேலும் கஞ்சாவால் மட்டும் அழிவு கிடையாது இங்கே ஹெராயின் போன்ற மிகக் கொடுமையாக இன்றைக்கு பள்ளி படிக்கின்ற மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அத்தனை பேரும் பாதிக்கின்ற ஒரு நிலைமை இருப்பதாக ஆளுநர் மன வருத்தத்தோடு பதிய வைத்துள்ளார் எனவும் தமிழ்நாடு எதை நோக்கி சென்று கொண்டுள்ளது என்பதை தமிழக மக்கள் நீங்கள் உணர வேண்டும்,எது நல்ல ஆட்சி நமக்கான நல்ல தலைவர் யார் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.விருதுநகரில் பட்டாசு ஆலையில் 4 உயிர்கள் பலியாகி உள்ளது, சென்னையில் கழிவுநீருடன்  குடிதண்ணீர் கலந்து 11 வயது குழந்தை ஆபத்தான நிலைமையில் அட்மிட் செய்துள்ளனர் அந்த குழந்தையை அட்மிட் செய்வதற்காக மருத்துவமனை கொண்டு சென்றால் 2000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர் இதை எவ்வளவு மன வருத்தத்துடன் நாம் சொல்ல வேண்டி உள்ளது இங்கே உயிருக்கு எந்த மரியாதையும் கிடையாது பணம் மட்டுமே பிரதானமாக உள்ளது என்றும்  அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்வதற்கு கூட 2000 ரூபாய் கொடுத்தால் தான் அட்மிட் செய்வேன் என்று சொன்னால் இந்த ஆட்சியின் அவல நிலை என்ன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிகிறது என்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சியும்  எந்தவித செயல்பாடுகள் இல்லாமல் முடங்கியுள்ளதாகவும் கூறினார்.மீண்டும் ஒரு மரணம் கள்ளச்சாராயத்தால் தமிழகத்தில் வரக்கூடாது என்ற நோக்கத்தில்  கள்ளச்சாராயம் காய்ச்சினால் ஆயுள் தண்டனை மற்றும் பத்து லட்சம் ரூபாய்  அபராதம் விதிக்கப்படும் என்று  தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும்  தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்துமா என்பதை முதல்வர் சொல்ல வேண்டும் என்றும் இவ்வளவு ஆண்டுகள் தூங்கிவிட்டு இப்போதுதான் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுந்தது போல இப்போதுதான் முதல்முறையாக கள்ளச்சாராயம்  செய்தது போல தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள் இது உண்மையிலேயே கண்துடைப்பு நாடகம் தான் என்றார்.கள்ளக்குறிச்சியில் மொத்தமாக ஆளுங்கட்சியின் துணையோடு தான் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது என்றும் இதற்கு முழு பொறுப்பு அமைச்சர் முத்துசாமி தான் என்றும் அவர் பதவி விலகினால் தான் இதை மக்கள் ஏற்றுக் கொள்ள முடியும், இதற்கு முழு பொறுப்பை அரசுதான் ஏற்க வேண்டும் இனி ஒரு மரணமும் நிகழக் கூடாது இது மிகவும் கண்டனத்திற்குரியது என்பதை நான் கூறிக் கொள்கிறேன் என்றார்.டாஸ்மாக்கில் அதிக விலைக்கு விற்பதால் அதை வாங்க முடியவில்லை என்று கள்ளச்சாராயம் வாங்க செல்கிறார்கள் என்று அமைச்சரே சொல்கிறார் என்றால் இது ஒரு சான்று போதும் இந்த அரசை டிஸ்மிஸ் செய்வதற்கு என்றும் நாம் இழக்க போகின்றோம் தமிழக முழுவதும் கள்ளச்சாராயம் இருக்கின்றது இதனை இரும்பு கரம் கொண்டு அடக்கினால் மட்டுமே தவிர அரசு ஆட்சியாளர்கள் காவல்துறை மக்கள் என அனைவரும் இணைந்தால் தான் இது சாத்தியமடையும் என குறிப்பிட்டார்.