பாமகவின் நிறுவனராக இருந்து வந்த ராமதாஸ் அந்த கட்சியின் தலைவராக மாறி இருக்கிறார். அன்புமணி ராமதாஸ் இனி தலைவர் இல்லை; செயல் தலைவர்தான் என்றும் அறிவித்திருக்கிறார். திடீரென்று ராமதாஸ் தலைவர் பதவிக்கு வந்தது ஏன்?
பாமவின் இளைஞரணி தலைவராக இருந்து வந்த அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதற் காக அவரை கட்சியின் தலைவர் ஆக்கினார் நிறுவ னர் ராமதாஸ். அதுவரை கட்சி தலைவராக இருந்து வந்த ஜி.கே.மணி கவுரவ தலைவர் ஆக்கப்பட்டார்.
தலைவர் பதவியை ஜி.கே.மணி தியாகம் செய்ததால் இளைஞரணி தலைவர் பதவியை அவரது மகன் ஜி.கே.எம்.தமிழ்க்குமரனுக்கு வழங்கினார் ராமதாஸ். ஆனால், ‘லைகா புரடக்ஷன்ஸ்’ சினிமா தயாரிப்பில் பிஸியாக இருப்பதால் தன்னால் கட்சி பொறுப்பை சரிவர கவனிக்க முடியவில்லை என்று கூறி இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார்.
தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி அன்று புதுச்சேரியில் நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், ‘ பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமனை நியமிக்கிறேன். அவர் அன்புமணிக்கு உதவியாக இருப்பார்’ என்று சொன்னார் ராமதாஸ்.உடனே இதை எதிர்த்தார் அன்புமணிஎனக்கு உதவி வேண்டாம். அவன் கட்சியில சேர்ந்தே நாலு மாசம்தான் ஆகுது. அவனுக்கு பதவியா?’’ என்று வெடித்தார் அன்புமணி.
அதற்கு ராமதாஸ், ‘இது என் கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும். விருப்பம் இல்லாதவர்கள் வெளியேறிவிடலாம்’ என்று ஆத்திரப்பட்டார். இதனால் கடுப்பான அன்புமணி, மைக்கை தூக்கி வீசினார். பின்னர் எழுந்து, தனக்கு பனையூரில் அலுவலகம் உள்ளது என்றும், தன்னை இனி தொடர்புகொள்ள விரும்புவோர் அங்கே வரலாமென்றும் அறிவித்தார்.
ஆனால், மறுநாளே தைலாபுரம் சென்ற அன்புமணி, ராமதாசை சந்தித்து பேசினார். அப்போது ராமதாஸ் இறுக்கமாக உட்கார்ந்திருந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ‘ பாமக பொதுக்குழுவில் நடந்தது உட்கட்சி விவகாரம். அதில் ஏற்பட்ட விவகாரத்தில் எனக்கும் அன்புமணிக்கும் உண்டானது கருத்து மோதல். அது சரியாகிவிட்டது. பாமக இளைஞரணி தலைவர் முகுந்தன் தான். பொதுக்குழுவில் அறிவித்து, அதன்படி நியமனக்கடிதமும் கொடுத்து விட்டேன். அதில் இனி எந்த மாற்றமும் இல்லை’ என்றார்.
ராமதாஸ் -அன்புமணி மோதல் அத்துடன் முடிவுக்கு வந்தது என்றால், இப்போது வேறுவிதமாக அது திரும்பியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த முடிவை எடுத்ததாக ராமதாஸ் தெரிவித்ததால், இந்த விவகாரத்தில் அன்புமணி பொறுமையாக இருக்க வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. ஏனென்றால் ராமதாஸ் ரொம்பவே பிடிவாதக்காரர். அவர் தான் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
மாநில அரசியலில் ஆர்வம் காட்டாமல் டெல்லி அரசியலிலேயே அன்புமணி அதிக ஆர்வம் காட்டி வருவதும் ராமதாசுக்கு அதிருப்தியை தந்திருக்கிறது. திமுக அணியில் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கலாம் என்று ராமதாஸ் கூற மத்திய அமைச்சர் கனவில் தேசிய கட்சியுடன் இணக்கம் காட்டுவதிலேயே குறியாக இருந்திருக்கிறார் அன்புமணி. இதனால்தான் கட்சியில் அதிரடி மாற்றம் கொண்டு வந்திருக்கிறார் ராமதாஸ் என்கிறது தைலாபுரம் வட்டாரங்கள்.
கலைஞரை நினைவு கூர்ந்த ராமதாஸ் திமுக பக்கம் சாய்கிறதா பா.ம.க
திமுக கூட்டணியில் பாமக இருந்த போது தினமும் திமுக அரசை விமர்சித்து கொண்டிருப்பார். ராமதாஸ். அது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘’தைலாபுரம் தோட்டத்தில் இருந்து எனக்கு தைலம் வருகிறது’’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார் கலைஞர். இப்படிதான் அவர்கள் இருவரின் அரசியல் இருந்தது.
அன்புமணிக்கும் தனக்கும் நடக்கும் பிரச்சனை குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலைஞரை நினைவு கூர்ந்தார் ராமதாஸ்.கூட்டணியில் இருந்து கொண்டே அரசை விமர்சித்தாலும் அதை எத்தனை பக்குவமாக கையாண்டார் கலைஞர். நாகரிகமாக, நளினமாக பேசினார் கலைஞர். ஆனால் இப்போது அரசியல் எப்படி எல்லாமோ போய்க்கொண்டிருக்கிறது என்று நொந்தார் ராமதாஸ்.
வரும் சட்டமன்றத்தேர்தலில் பாஜக கூட்டணியிலேயே இருந்து மத்திய
அமைச்சர் பதவியை பெற்றுவிட வேண்டும் என்று அன்புமணியின் எண்ணம்.
ஆனால், மாநில அரசியல்தான் முக்கியம். வரும் தேர்தலில் திமுகவுடன் கூட்டணிக்குச் செல்ல வேண்டுமென்கிற முடிவில் உள்ளார் ராமதாஸ். இதனால் தந்தை, மகன இருவரிடையே பிரச்சனை எழுந்து அது கட்சி தலைவர் பதவியை ராமதாஸ் கைப்பற்றும் அளவுக்கு சென்று விட்டது.
திடீரென்று அந்த நாள் ஞாபகம வந்து கலைஞரை புகழ்ந்து பேசிய ராமதாசின் இந்த மனமாற்றத்தைப் பார்க்கும் போது பாமக, திமுகவுடன் கூட்டணி அமைக்க நினைக்கிறதா? என்ற கேள்வியே எழுந்துள்ளது.
Leave a Reply