விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், தனது கட்சியில் ஏற்பட்ட பிளவு மற்றும் அன்புமணி ராமதாஸ் குறித்து கடும் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
“அரசியலில் சில தவறுகள் செய்துள்ளேன்; அதில் மிகப்பெரிய தவறு அன்புமணியை மத்திய அமைச்சராக ஆக்கியது தான். அவரின் செயல்பாடுகள் அருவருக்கத்தக்கவையாக மாறியுள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சியை நான் அமைதியாக நடத்திக்கொண்டிருந்தபோது அதில் பிளவு ஏற்பட்டது. என்னோடு இருந்த 5 எம்எல்ஏக்களில் 3 பேர் அன்புமணியுடன் சேர்ந்துள்ளனர். என்னை ‘அய்யா’ என்று அழைத்தவர்கள் இன்று சமூக வலைதளங்களில் திட்டுகின்றனர்.
நான் தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களை 38 மாவட்டங்களாகப் பிரிக்க வழி செய்தவன். பல போராட்டங்களை வன்முறை இல்லாமல் நடத்தி வெற்றிபெற்றேன். ஆனால், அன்புமணியும் அவரது மனைவியும் கட்சியைக் கும்பல் போல நடத்துகின்றனர். அவர்களின் தரப்பினர் துப்பாக்கியை மட்டும் இதுவரை பயன்படுத்தவில்லை; அதையும் விரைவில் பயன்படுத்திவிடுவார்கள்,” என்று ராமதாஸ் கடுமையாக விமர்சித்தார்.



Leave a Reply