,

அன்னூரில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி அருண்குமார்

prg arunkumar
Spread the love

கோவை புறநகர் வடக்கு மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னூர் தெற்கு ஒன்றியம் மைல்கல்லில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் மற்றும் மக்கள் பணிகள் குறித்து நடைபெற்ற செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்து கொண்டு பேசினார். உடன் செய்தி தொடர்பாளர்  கே.கல்யாணசுந்தரம், அன்னூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஓ.எஸ்.சாய் செந்தில், கோவை புறநகர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர், நீலகிரி நாடாளுமன்ற வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், கோவை புறநகர் வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் கோகுல், கோவை புறநகர் வடக்கு மாவட்ட இளம் பெண்கள் மற்றும் பாசறை செயலாளர் வசந்த் சண்முகம், மாவட்டம், சார்பணி, ஒன்றிய கழகம், பேரூராட்சி, கிளை செயல் வீரர்கள் கலந்து கொண்டனர்