, , ,

​அனைத்து மதத் தலைவர்க​ள் இணைந்து மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

nkarthik
Spread the love

கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில், அனைத்து மதத் தலைவர்களும் பங்கேற்ற மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் தலைமையில், வடகோவை கிஸ்கால் கிராண்ட் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பு தலைவர் எம்.ஏ.இனாயத்துல்லா, தலைமை இமாம் மஸ்தித் இப்ராஹிம் தலைவர், கோவை மாவட்ட கிலால் கமிட்டி எம்.ஏ.அப்துல் ரஹீம், தாவூதி போரா ஜமாத் ஷேக் மொய்த், ஷேக் அலி‌அஸ்கர், ஹகீம் மொய்தீன், பல்சமய நல்லுறவு இயக்க மாநில தலைவர் முகமது ரபீக், ஆர்.சி.சர்ச் பங்குத்தந்தை தனசேகர், கெவின், ஆண்ட்ரோஸ், குருத்வாரா சிங் சபா டோனி சிங், ஜெயின் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் ஜி.சி.ஜெயின் எஸ்.சி.எஸ்., ஸ்ரீ வர்தமான் ஜெயின் சேவா சங்க நிறுவனர் மா.ராஜேஷ்குமார், நிர்மலா மகளிர் கல்லூரி வின் அரசி, ஹெலன் உள்ளிட்ட அனைத்து மதத் தலைவர்களும் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.
மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்ற நிகழ்ச்சியில், திமுக தீர்மானக்குழு இணைச் செயலாளர் பி.நாச்சிமுத்து, கோவை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் கணபதி ராஜ்குமார், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் மற்றும் அனைத்து மதங்களையும் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.