அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நலம் மையம் சார்பில் கோவை புலியகுளம் புனித அந்தோனியார் அருள்தளம் மினி ஹாலில் நிறுவனத் தலைவர் கோவை சி.எம். ஸ்டீபன் ராஜ் தலைமையில் கிறிஸ்மஸ் குதூகல கொண்டாட்ட விழா நடைபெற்றது.
இதனை கௌரவ ஆலோசகர் மில்டன் துவக்க ஜெபம் செய்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் திரைப்பட தயாரிப்பாளரும், சமூக ஆர்வலரும் திரைப்பட நடிகருமான பிரதீப் ஜோஸ் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் பாடல் பாடி ஏழை எளிய தாய்மார்கள் 200 பேருக்கு புடவைகள் வழங்கினார்.
இதேபோல் இரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட நடிகர் பிரதீப் ஜோஸ் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் காமராஜ் சுல்லா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply