அதிமுக 53 வது ஆண்டு தொடக்கவிழாவை, கோவை விளாங்குறிச்சி பகுதியில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பிஆர்ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ , மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் கே.ஆர். ஜெயராம்,எம்.எல்.ஏ தலைமையில், நடைபெற்ற விழாவில் கழக கொடியை ஏற்றி வைத்து, எம்ஜிஆர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், மேலும் கழக 53வது ஆண்டு விழா துவக்க விழாவை முன்னிட்டு ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான இலவச ஆம்புலன்ஸ் சேவையை பால்ராஜ் ஏற்பாட்டின் பேரில் சட்டமன்ற உறுப்பினர்கள் பிஆர்ஜி அருண்குமார்எம்.எல்.ஏ, கே.ஆர்.ஜெயராம் எம்.எல்.ஏ, ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர்.நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் வேலுசாமி, வட்ட கழக செயலாளர்கள் மாணிக்கம், விஜயகுமார், சம்சுதீன், பால்ராஜ், சண்முகசுந்தரம் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Leave a Reply