கோவையில் அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அதிமுக கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளரும் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ச்சுணன் தலைமை தாங்கினார். இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் பீளமேடு துரைசாமி, அம்மா பேரவை செயலாளர் பிரபாகரன், பகுதிகழகச் செயலாளர்கள் காட்டூர் செல்வராஜ், MGJ.ராஜ்குமார், சௌரிபாளையம் வெள்ளிங்கிரி, உலகநாதன் சாரமேடு சந்திரசேகர், உக்கடம் கணேசன், மெளனசாமி, சிங்கை பாலன், பாசறை மாவட்ட செயலாளர் பப்பாயா ராஜேஷ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விஜயகாந்த் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் விஜயகாந்துக்கு மலர் அஞ்சலி

Leave a Reply