அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டமன்றத் தொகுதி வாரியாக, ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, அவர் 54 ஆம் நாளான இன்று நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் உள்ள தனியார் விடுதியில் பல்வேறு சங்கங்களுடனான கூட்டத்தின் போது, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை ஜனதா தள மாநிலத் தலைவர் காளப்பட்டி பொன்னுசாமி, நீலகிரி மாவட்ட தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் கப்பச்சி டி.வினோத் ஆகியோர் உடன் இருந்தனர்.
அதிமுக பொது செயலாளர் எடப்பாடியாரை சந்தித்த ஜனதா தள தலைவர் காளப்பட்டி பொன்னுசாமி



Leave a Reply