அதிமுக-பாஜக கூட்டணி: உற்சாகத்தில் இரு கட்சி தொண்டர்கள்

amitshah
Spread the love

எதிர் வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக இடையே கூட்டணி மலர்ந் துள்ளது.
கடந்த மாதம் 25ஆம் தேதி டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலா ளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் அதிமுக – பாஜக இடையே கூட்டணி அமைப்பது தொடர்பாகவும்,கூட்டணி ஏற்பட்டால் அதில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் பேசினார்.
இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இரு கட்சிகளிடையே தேர்தலுக்கான கூட்டணி உறுதியானதாக பேசப் பட்டது.
ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப் பிலோ, அதிமுக தலைமை கழகமோ இது குறித்தான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2 நாட்கள் கழித்து அளித்த பேட்டியில், வரும் சட்ட மன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி,அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்பதை உறுதிப் படுத்தினார்.
இந்நிலையில் சென்னை வருகை தந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி சாமி சந்தித்து கூட்டணி பேச்சு வார்த்தை யில் ஈடுபட்டார்.
அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முனுசாமி, பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உடன் இருந்தனர்.
இப் பேச்சுவார்த்தையில் கூட்டணி உறுதி உறுதியா னது அடுத்து, அதிமுக பாஜக கூட்டணி உருவான தகவலை அமித் ஷா அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.
தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடி தலை மையிலும், தமிழகத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் தேர்தலை சந்திக்க உள்ளோம். கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து வருகிறது என விரிவாக பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, சனாதன தர்மம், மும்மொழிக் கொள்கை, பாராளுமன்ற தொகுதி மறு வரையறை என தமிழகத்தை ஆளும் திமுக அரசு பல்வேறு பிரச்சனைகளை எழுப்புகிறது.
திமுக அரசு மீது மக்களுக்கு உள்ள அதிருப்தி, ஊழல், மோசடி உள்ளிட்ட வற்றில் இருந்து மக்களை திசை திருப்ப இப் பிரச்சனைகளை எழுப்புகின்
றனர். வரும் தேர்தலில் திமுகவின் ஊழல், மோசடி கள் குறித்து பேசப்படும்.
டாஸ்மாக் நிறுவனத்தில் 39 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.
மணல், எரிசக்தி, போக்குவரத்து, ஊட்டச் சத்து, இலவச வேட்டி -சேலை, ஊரக வேலைத் திட்டம் போன்ற வற்றிலும் ஊழல் நடந்துள்ளது என திமுகவை கடுமையாக தாக்கி பேசினார்.
மேலும், திமுக தமிழ் வளர்ச்சிக்காக என்ன செய்திருக்கிறது என்பதை பட்டியலிட முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.
அதிமுக பாஜக கூட்டணி தொடர்பான தகவலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விரிவாக கூறி தெளிவு படுத்தி விட்டார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தி யாள ர்களிடம் தெரிவித்தார்.
1998-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக் காக அதிமுக – பாஜக கூட்டணியை, அப்போதைய பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஏற்படுத்தினார். அந்த தேர்தலில், இக்கு கூட்டணி 30 இடங்களை கைப்பற்றியது.
2004-ம் வருடம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்தது. ஆனால் அந்த தேர்தலில் இரு கட்சிகளும் தோல்வியை தழுவியதால், பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்வதாக ஜெயலலிதா அறிவித்தார்.
தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து களம் கண்டன.
தற்போது வரும் 2026 தேர்தலுக்காக நான்காவது முறையாக அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ளதை இரு கட்சித் தொண்டர்களும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
சட்ட மன்ற தேர்தல் வெற்றிக்கான அச்சாரமே, இரு கட்சிகளின் கூட்டணி என கொண்டாடி மகிழ்கின்
றனர். அதிமுக சார்பில் ஏற்கனவே, 10 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்கப் பட்டு, தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.
இந்நிலையில் இக்கூட்டணிக்கு வலு சேர்க்கும் வகையில், பாமக, தேமுதிக ,தமாகா உள்ளிட்ட கட்சிகளும், சாதி ரீதியான அமைப்புகளும் சேர இருப்பதாக தெரிவிக்கப்
பட்டுள்ளது.மேலும் தனித்துப் போட்டியிட்டு 8 சதவிகித வாக்கு வங்கியை கொண்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், திமுக எதிர்ப்பு நிலையில் இருப்பதால், அக்கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில், சேருவதற்கான வாய்ப்பு இருப்பதாக, அக்கட்சியின் கடந்த சில மாத அரசியல் நகர்வுகள் உள்ளன.
இதனால் ஆளும் திமுக கூட்டணிக்கு , அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் சவாலை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
பாஜக, திமுக என இரு கட்சிகளையும் கடுமையாக சாடிவடும் தமிழக வெற்றிக் கழகம் வரும் தேர்தலில், தனித்தே களம் காணும் என கூறப்படுகிறது.
தேர்தல் தொடர் பாக,மற்ற கட்சிகளுடன் பேசுவதற்கான முயற்சி களை முன்னெடுக்க வில்லை என்பதால், தேர்தல் நேரத்தில் அக்கட்சியின் நிலைப்பாடு தெரியவரும்.
திமுக தலைமையிலான கூட்டணி கட ந்த 2019 முதல் நடந்த தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.
கூட்டணி கட்சியினரிடம், உரிய மரியாதையுடன், நல்ல நட்பு உணர்வை பேணுவதால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், கூட்டணியை விட்டு வருவ
தற்கு தயாராக இல்லை. தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், தமது தொகுதி தொடர்பான பிரச்சனைகள் குறித்து பேசி வருவது திமுக தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. அக்கட்சி திமுக கூட்டணியில் இருந்து, விலகி விடும் என கூறப்படுகிறது.
மற்ற கட்சிகள் இணைந்த வலுவான கூட்டணி, தொண்டர் பலம், ஆளும் அரசு என்பதால், அதிகார பலம் உள்ளிட்டவைகளை வைத்து திமுக கூட்டணி வரும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது .
திமுக தலைவர் மு க ஸ்டாலின், 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
என்றாலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பெரும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.