முன்னாள் மாநிலங்களவை எம்.பி மற்றும் அதிமுக முன்னாள் அமைப்புச் செயலாளர் மைத்ரேயன், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்ததற்கான காரணங்களை ஆதாரத்தோடு விளக்கியுள்ளார்.
புதன்கிழமை காலை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த மைத்ரேயன், தன்னை அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைத்துக் கொண்டார். பிறகு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து, அதிமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அவர் கூறியதாவது:
-
“மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு முன்னேற்ற state’s model ஆக இருக்கிறது. கல்வி, சமூக நலன், தனிநபர் வருமானம், பொருளாதாரம் ஆகியவை அனைத்தும் வளர்ச்சியடைந்துள்ளன.
-
கருணாநிதியின் மாநில சுயாட்சி முழக்கத்தை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஸ்டாலின் ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார்.
-
தில்லி வசமான கட்டுப்பாட்டில் அதிமுக உள்ளது, இப்போது அந்த கட்சியில் சிலர் திட்டமிட்டு அதை கைப்பற்றி வைத்திருக்கிறார்கள்.
-
பாஜக-அதிமுக கூட்டணியின் பின்னணி தெளிவாக இல்லாதது, மக்கள் சந்தேகத்திற்கு உள்ளாகும்.
-
என்னை பயன்படுத்த மறுத்த அதிமுக, எனவே அந்த கட்சியிலிருந்து விலகி, ஸ்டாலினின் சிப்பாயாக திமுகவில் இணைந்தேன்.
-
2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக 200+ தொகுதிகளில் வெற்றி பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
-
இது 2வது இடத்துக்கான தேர்தலாக தான் அமையும்; மத்திய உத்தரவுகளுக்குள் செயல்படும் அதிமுகவுக்கு மக்கள் விருப்பமில்லை எனவும் கூறினார்.



Leave a Reply