அதிமுக ஒன்றாக இருக்கிறது என்பதை தேர்தல் வெற்றி சொல்லும் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த எடப்பாடியார்

Spread the love

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை ஆகிய தொகுதிகளில் மக்களை சந்திக்கிறார்.
முதலில் வால்பாறை தொகுதிக்குட்பட்ட ஆனை மலை பொள்ளாச்சி சாலையில் பெருந்திரளாகக் கூடியிருந்த மக்களிடம் உரையாற்றினார். உடன் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி
“திமுக ஆட்சிக்கு வந்து 52 மாதம் முடிந்துவிட்டது. இந்த ஆட்சியில் வால்பாறை தொகுதிக்கு புதிய திட்டம் ஏதாவது கொண்டு வந்தார்களா? தேர்தல் நேரத்தில் 525 அறிவிப்புகளை வெளி யிட்டு, ஆட்சி வந்ததும் மக்களை மறந்து விட்டார்கள். இதுவே அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களைக் கொடுத்தோம். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ஒரே அதிமுக ஆட்சியில் இரண்டு முறை தள்ளுபடி செய்தோம்.
விவசாயிகள் எந் நேரமும் மோட்டாரை பயன்படுத்த ஏதுவாக மும்முனை மின்சாரம் 24 மணி நேரம் கொடுத்தோம். விவசாயிகளுக்காக அதிமுக ஆட்சியில் குடிமராமத்துத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர்த்தேக் கப்பட்டன, அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒருபக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொருபக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. இப்ப ஒரு லோடு மண்ணாவது எடுக்க முடியுமா? ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் குடிமராமத்துத் திட்டம் தொடரும்.
விவசாயத் தொழி லாளிகளுக்கு பசுமை வீடுகள், ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் கொடுத்தோம். உழவர் பாதுகாப்புத் திட்டம் கொடுத்தோம், முதியோர் உதவித் திட்டம் மூலம் லட்சக் கணக்கான முதியோருக்கு மாத உதவி த்தொகை கொடுத்தோம். ஒரே சட்டமன்ற விதி 110ன் கீழ் 5 லட்சம் முதி யோருக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பைக் கொடுத்து, 4 லட்சத்து 85 ஆயிரம் பேருக்குக் கொடுத்தோம்.
கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம்.
அதில் ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணியில் அமர்த்தி, கிரா மப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தோம். திமுக அரசு ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து, கிளினிக்கை மூடிவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும். இந்த அதிமுக திட்டத்துக்கு மக்களிடம் வரவேற்பு இருந்ததால் திமுக ஆட்சி ரத்து செய்துவிட்டது.
பொருளாதாரச் சூழலால் ஏழைப் பெண்களின் திருமணம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் 25 ஆயிரம் ரூபாய், ரூ.50 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் கொடுத்தோம். அதிமுகவின் 10 ஆண்டுகளில் 12 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இதனை திமுக அரசு நிறுத்திவிட்டது
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமக னுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும். இந்தக் கட்சியே ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட கட்சி. எனவே ஏழைகளுக்காகவே செயல்படும்.பொருளாதாரச் சூழலால் ஏழைப் பெண்களின் திருமணம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் 25 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் கொடுத்தோம். அதிமுகவின் 10 ஆண்டுகளில் 12 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இதனை திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதோடு மணப் பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும். இந்தக் கட்சியே ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட கட்சி. எனவே ஏழைகளுக்காகவே செயல்படும்.
ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞானக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா எண்ணத்தில் உதித்தது அற்புதமான லேப்டாப் வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் 7300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது.
மாணவர்களுக்கு அறிவுபூர்வமான கல்வி கிடைக்க அதிமுக அரசு செயல்படுத்தியது. அதையும் திராவிட மாடல் அரசு நிறுத்திவிட்டது. திமுக அரசால் நிறுத்தப்பட்ட இத்திட்டமும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அமல்படுத்தப்படும்.
கிராமப் புறங்களில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் வெறும் 9 பேருக்குத்தான் மருத்துவக் கல்வி கிடைத்தது. அத்தகைய ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்க, 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கினோம்.
அதன்மூலம் 2,818 பேர் ஒரு ரூபாய் செலவில்லாமல் இலவசமாக மருத்துவம் படித்து இப்போது மருத்துவர் ஆகியிருக்கிறார்கள். இப்படி முழுக்க முழுக்க ஏழைகளுக்காக பல்வேறு திட்டங்கள் கொடுத்தோம்.
திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே இல்லை. எல்லா துறைகளிலும் ஊழல்., எந்தெந்த துறைகளில் எல்லாம் கொள்ளையடிக்கலாம் என்று பார்த்துப்பார்த்து கொள்ளையடிக்கும் ஆட்சி திமுக அரசு. விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அரிசி, பருப்பு, எண்ணெய் விலை உயர்வு. ஆனால் விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை.
அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதன்மூலம், அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுத்தோம். ஏழைகள் பாதிப்பை பற்றி கவலைப்படவில்லை, வீட்டு மக்களை பற்றி மட்டும்தான் முதல்வர் சிந்திப்பார்.
ஏழை, விவசாயத் தொழிலாளி, தாழ்த்த ப்பட்ட, மலைவாழ், மீனவ மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லா தவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும். மலையில் இருந்தாலும் சரி இப்பகுதியில் இருந்தாலும் சரி கட்டிக்கொடுப்போம். மக்கள் பாராட்டும் அளவுக்கு வீடுகள் இருக்கும்.
தைப்பொங்கல் அன்று விலையில்லா வேட்டி சேலை கொடுத்தோம், திமுக அதை சரியாக செயல்படுத்தவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் எம்ஜிஆரால் கொண்டுவரப்பட்ட இத்திட்டம் தொடரும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் வீட்டு மனை கொடுத்தோம், ரேஷன் கார்டு தேவைப்படுபவர்களுக்கு எல்லாம் கொடுத்தோம். என்னென்ன வேண்டும் என்றார்களோ அ வற்றை எல்லாம் செயல்படுத்தினோம்.
மின் கட்டணம் இந்த ஆட்சியில் 67% உயர்த்திவிட்டனர். தொழி ற்சாலை, கடைகளுக்கு பீக் ஹவர் கட்டணம் என்று தனியாக வசூலிக்கிறார்கள். குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர்.
போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான். வரி அதிகம் வசூலித்தாலும் மக்களுக்குத் தேவையான திட்டம் எதுவுமில்லை.
அதிமுக ஐசியுவில் இருக்கிறது என்கிறார் உதயநிதி. அப்படியா இருக்கிறது..? நீங்கள் நேரலையில் பாருங்கள், மக்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வருமென்று எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். திமுகதான் ஐசியுவில் இருக்கிறது.
எல்லா கட்சிகளிலும், விரும்பியவர்கள் கட்சியில் சேருவார்கள். திமுக செல்வாக்கை இழந்துவி ட்டதால் வீடுவீடாகச் சென்று கெஞ்சி, கையெழுத்துப்போடுங்க என்று கேட்கும் அவலநிலை திமுகவுக்கு வந்திருக்கிறது. திமுகவுக்கு மருத்துவமனையில் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. வென்டிலேட்டர் இருக்கும் வரைதான் உயிர் இருக்கும். அதை எடுத்துவிட்டால் உயிர் போய்விடும். அதுபோல இன்னும் 7 மாதம் தான் இருக்கிறது. அதுவரையே அதிகாரம், அதிகாரத் திமிரில் பேசுவதை விட்டுவிட்டு, மக்களுக்குத் தேவையான நன்மைகளை செய்யுங்கள்.
அதோடு அதிமுக மூன்றாக, நான்காகப் போய்விட்டது என்கிறார்கள். எல்லாமே ஒன்றாக இருக்கிறது என்பதை சட்டமன்றத் தேர்தலிலே காண்பிப்போம். இப்படி சொல்லிச்சொல்லி டிவியிலும் பத்திரிகையிலும் நீங்கள் வைத்திருக்கும் நிறுவனம் மூலமாக அவதூறு பிரசாரம் பரப்பிவருகிறீர்கள்.
திமுகவினர் கூட்டணி பலத்துடன் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை மக்களையே நம்பியிருக்கிறது. மக்கள் தான் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிப்பது. கூட்டணி தன்னை காப்பாற்றும் என்று ஸ்டாலின் நினைக்கிறார், ஆனால் மக்கள் அந்த நிலைப்பாட்டில் இல்லை, அதிமுக ஆட்சி மலர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் உள்ளனர்.
திமுக கொள்கைதான் எல்லா கூட்டணிக் கட்சிகளுக்கும் இருக்கிறதாம், அப்படியெனில் ஒரே கட்சியாகிவிடலாமே, ஏன் தனித்தனி கொள்கை? அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் தனித்தனி கொள்கை உள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. தனித்தனி கட்சி நடத்த வேண்டிய அவசியமில்லை. அதிமுகவைப் பொறு த்தவரை கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுவது, கொள்கை என்பது நிலை யானது. அந்த கொள்கை அடிப்படையில்தான் கட்சி செயல்படும்.
திமுக அப்படியல்ல, கூட்டணிக் கட்சிகளை ஏமாற்றி விழுங்கிக் கொண்டிருக்கிறது. உஷாராக இருந்தால் நீங்கள் உங்கள் கட்சியைக் காப்பாற்றிக்கொள்ளலாம் இல்லை யெனில் தேர்தலுக்குள் உங்கள் கட்சியை திமுக விழுங்கிவிடும். கூட்டணியை உடைப்பதற்காக எடப்பாடி பேசுவதாகச் சொல்கிறார்கள்,
நாங்கள் உடைக்கத் தேவையில்லை, நீங்களே உடைந்துபோவீர்கள்.
ஏனென்றால், கம்யூனிஸ்ட் கட்சி அப்படித்தான் பேசுகிறார்கள். 98% வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை, தவறான கணக்காக இருக்குது என்கிறார்கள். அப்படியெனில் கூட்டணிக் குள் முர ண்பட்ட கருத்து இருக்குது என்றுதானே அர்த்தம். தேர்தல் வரை தாக்குப்பிடிக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
தென்னை விவசாயிகளுக்கு நிறைய திட்டங்கள் கொடுத்திருக்கிறோம். தென்னையில் வாடல் நோய் விழுந்திருக்கிறது. இதை போக்குவதற்கு அதிமுக ஆட்சியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சி அடைகின்றபோது மத்திய அரசோடு தொடர்புகொண்டு, விலை உயர்த்த நடவடிக்கை எடுத்த அரசாங்கம் அதிமுக அரசு.
வால்பாறை தொகுதியில், 95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிராமப்புறச் சாலைகள் புதிதாக அமைத்தோம், சுமார் 60 கோடியில் வால்பாறை தோட்டப்பகுதியில் சாலை அமைத்தோம், ஆனைமலை தனி தாலுகாவாக உருவாக்கினோம், சுமார் 20 கோடியில் பசுமை வீடுகள் கட்டிக்கொடுத்தோம், பேரூ ராட்சியில் வீடு கட்டினோம், தூர்வாரப்பட்டு வண்டல் மண் கொடுக்கப்பட்டது, வால்பாறை 5 கோடியில் அம்மா படகு இல்லம், 3 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டது, 2 கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் நிறைவேற்றப்பட்டது, நகராட்சி அலுவலகம் கட்டப்பட்டது.நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய தடுப்பணைகள் 9 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டன, ஆனைமலை ஊராட்சிக்கு புதிய அலுவலகக் கட்டிடம் கட்டப்பட்டது, நாலேகால் கோடி ரூபாய் மதிப்பில் வால்பாறை அரசு பொதுமருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்கப்பட்டது, 2 கோடியில் கம்பாலப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ஆழியார் முதல் அங்கலக்குறிச்சி வரை புனரமைக்கப்பட்டது, மீதமுள்ள பகுதி புனரமைக்கும் பணியை திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது, அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் நிறை வேற்றித் தரப்படும். பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டது. இவையெல்லாம் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது.
ஆனைமலையாறு நல்லாறு திட்டம் கேரள மாநிலத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறீர்கள், அதிமுக ஆட்சி இருந்தபோது நானும், வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நேரடியாக கேரள முதல்வர் முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தி னோம், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு சுமூகமாகப் பேச்சுவார்த்தை நடந்துவந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது, மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஆனைமலையாறு நல்லாறு திட்டம் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆழியாறு பகுதியை சிறந்த சுற்றுலாத் தலமாக்கவும், வால்பாறை பகுதியில் சர்வதேச தரத்துடன் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறீர்கள், வால்பாறை எஸ்டேட் பகுதியில் வன விலங்கு களால் தொழிலாளர்கள், பொதுமக்கள் உயிரிழக் கிறார்கள், பொருளாதார இழப்புகள் ஏற்படுகிறது, இவற்றைத் தடுக்க வனத்துறை மூலம் நடவடிக்கை எடுகக் வேண்டும் என்றும் கேட்டிருக்கிறீர்கள். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இப்பகுதி மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கப்படும். தேயிலை தோட்டத் தொழிலாளிகள் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளீர்கள், உங்கள் கோரிக்கை எல்லாம் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும்.
இந்த தொகுதி எம்.எல்.ஏ அமுல்கந்தசாமி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார், அவர் இருக்கும்போது இத்தொகுதிக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார், நல்லவர் வல்லவர் திறமையானவர். அனைவரிடமும் அன்பாகப் பழகுபவர். அவர் தொகுதி மக்களுக்கு தேவையான திட்டங்கள் வருவதற்கு முயற்சித்தார். மறை ந்தாலும் உங்களுக்காக பாடுபட்டவர், அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். அவருக்கு எப்போதும் புகழ் சேர்க்கும் வகையில் அதிமுக செயல்படும்.
அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.” என்று பேசினார் எடப்பாடியார்.