முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை அதிமுக இளைஞரணி மற்றும் இளைஞர் பாசறை சார்பில் காட்டூர், ராமநாதபுரம், பீளமேடு உள்ளிட்ட ஏழு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுணன் மற்றும் கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் பப்பாய் ராஜேஷ் மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் நிர்வாகிகள் பீளமேடு துரை லோகநாதன், காட்டூர் செல்வராஜ், ராமநாதபுரம் ஏ.ஜே. செல்வகுமார், கணேசன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




Leave a Reply