அதிமுகவை விட்டு விலகிய அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார்

Spread the love

சென்னை: அதிமுக அமைப்பு செயலாளராக இருந்த அன்வர் ராஜா, பாஜக-அதிமுக கூட்டணியால் ஏற்பட்ட அதிருப்தியின் பின்னணியில், அதிமுகவிலிருந்து விலகி இன்று திமுகவில் இணைந்தார். திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், அவர் அண்ணா அறிவாலயத்தில் திமுக உறுப்பினராக சேர்ந்தார்.

பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்ததிலிருந்து, அதிமுக மீதான தனது அதிருப்தியை தெரிவித்து வந்த அன்வர் ராஜா, சமீபத்தில் பாஜக தமிழகத்தில் வேரூன்ற முடியாது என்றும், அந்தக் கூட்டணி சிறுபான்மையினர் வாக்குகளை பாதிக்கும் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

அ.தி.மு.க-வில், ஜெயலலிதா காலத்தில் முக்கியப் பங்களிப்பை வழங்கியவர் அன்வர் ராஜா. 2001 முதல் 2006 வரை தொழிலாளர் துறை அமைச்சராகவும், 2014 முதல் 2019 வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். எம்.ஜி.ஆர் மறைவின் பின்னர் அதிமுக இரண்டாகப் பிரிந்த போது ஜானகி அணிக்கு சென்றவரும் இவரே.

இந்நிலையில், திமுகவில் இணைந்த செய்தி உறுதியானதும், அன்வர் ராஜாவை அதிமுகவில் இருந்து நீக்குவதற்கான உத்தரவை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

அன்வர் ராஜாவின் இந்த முடிவு, தமிழக அரசியலில் முக்கிய மாற்றங்களை உருவாக்கும் வகையில் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அன்வார் ராஜா தன்னை திமுகவில் இணைந்து கொண்டார். திமுகவில் இணைந்த அன்வர் ராஜாவிற்கு முதல்வர் ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்பு கொடுத்தார்.