மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அமமுக தலைவர் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சித்தார்.
அவர் கூறியதாவது:
“வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்த்திருத்தம் குறித்து நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் 60 கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு, 20 கட்சிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை.
அமமுக கட்சியின் டிடிவி தினகரன் திடீரென அதிமுகவை காப்பாற்ற புதிய அவதாரமெடுத்துள்ளார். ஆனால், அவர் தலைமையில் ஒரு தேர்தலிலும் அமமுக வெற்றி பெறவில்லை. டிடிவி தினகரன் எடுப்பது பழைய படம், புதிய காப்பி. அதிமுகவை மீட்டு தாருங்கள் என யாரும் டிடிவி தினகரனிடம் கேட்கவில்லை.
எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள். அதனை திசைதிருப்பும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார். திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என கன்னியாகுமரி முதல் சென்னை வரை மக்கள் உறுதி கொண்டுள்ளனர்,” என அவர் தெரிவித்தார்.
செங்கோட்டையன் நீக்கம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “அவரது பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என எனக்கு தெரியாது,” என்றும் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.



Leave a Reply