2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சட்டமன்றத் தொகுதி வாரியாக பூத் கமிட்டிகளை அமைத்தல், கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தல், உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் உரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கழகத்தின் புதிய இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியில் ஊராட்சி, நகர மற்றும் மாநகராட்சிகள் மட்டத்தில் அதிகளவில் விளையாட்டு வீரர்களை உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான பணிகளையும் இவர்கள் மேற்கொள்வார்கள்.
இதன் அடிப்படையில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர்களாக பொன்னையன் மற்றும் வினோத்குமார், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தம்பிதுரை எம்.பி. மற்றும் விக்னேஷ், திருச்சி புறநகர் தெற்கிற்கு செம்மலை, மதுரை மாநகருக்கு வளர்மதி மற்றும் ஆணிமுத்து, திருச்சி மாநகருக்கு கோகுல இந்திரா மற்றும் அறிவொளி, கரூருக்கு சின்னசாமி, திருநெல்வேலி மாநகருக்கு கருப்பசாமி பாண்டியன், சிவசாமி, சிவ ஆனந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை புறநகர் மாவட்ட பொறுப்பாளர்களாக வேணுகோபால் மற்றும் பிரசாத், ராணிப்பேட்டை மேற்கு பொறுப்பாளராக சேவூர் ராமச்சந்திரன், ஈரோடு புறநகர் மேற்கு பொறுப்பாளராக செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் பொறுப்பேற்கின்றனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply