அதிமுகவில் குடும்ப அரசியல் நடக்கிறது – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

Spread the love

கோவை விமான நிலையம் வந்தடைந்த முன்னாள் அமைச்சர் டி.செங்கோட்டையன், சென்னை பயணத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து நான் ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளேன். திமுகவில் மட்டும் அல்ல, அதிமுகவிலும் குடும்ப அரசியல் நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி மைத்துனர், மாப்பிள்ளை போன்றவர்கள் கட்சியில் தலையெடுத்து வருவது அனைவரும் அறிந்த உண்மை,” என்று கூறினார்.

தொடர்ந்து அவர், “இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும் என்ற நோக்கில், புரட்சித்தலைவர் காலத்திலிருந்தே நான் பணிகளை செய்து வருகிறேன். தன்னால் முடியாததை முடியும் என்று சொல்லி தன்னையும் பிறரையும் ஏமாற்றிக் கொள்ளக் கூடாது,” என தெரிவித்தார்.