நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். இதேபோல், கேரளா மற்றும் தமிழக பாராளுமன்ற பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
அவரை சந்தித்த பிறகு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர், இன்று தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் தலைமையில் காலையில் கேரள மாநிலத்திலும் பிற்பகல் தமிழகத்திற்கான மாநாடு கோவையிலும் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.தேசிய தலைவர்கள் வரும்பொழுது அவர்களின் வசதிக்கேற்ப இரு மாநிலத்திற்கும் அருகாமையில் இருக்கக்கூடிய இடங்களில் நிகழ்ச்சிகள் நடப்பது இயல்பு என்றார்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்சிப் பணிகளை முடக்கிவிடும் வகையில் தமிழக பாராளுமன்ற பொறுப்பாளர்கள் கூட்டம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. அதில் தேர்தலை எப்படி எதிர்கொள்வது மற்றும் தயாரிப்புகள் குறித்து தேசிய தலைவர்கள் அறிவுரை வழங்குவார்கள்.
கூட்டணியை பொறுத்தவரை தேசிய தலைமை முறையான அறிவிப்பு வெளியிடுவார்கள் என்றார். எத்தனை கட்சிகள் கூட்டணியில் வருகிறார்கள், யார் யாரெல்லாம் வருகிறார்கள், எப்போது வருகிறார்கள் என தேசிய தலைமை தெரிவிக்கும்.வேட்பாளர்கள் மற்றும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தேசிய தலைமை மற்றும் பாராளுமன்ற குழு அறிவிப்பார்கள் என கூறினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரும்பி கோவையில் போட்டியிட்டால், அதற்கான வேலைகளை செய்ய தயாராக உள்ளோம் என கூறினார்.
Leave a Reply