புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரங்குடிபட்டியில் நடைபெற்று வரும் 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சூடு போட்டியில் இன்று பரபரப்பு நிலை ஏற்பட்டது.
தமிழ்நாடு துப்பாக்கிச் சூடு சங்கம் மற்றும் புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்தும் இப்போட்டியில், சிறப்பு விருந்தினராக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு அவர் பதக்கங்களை கழுத்தில் அணிவித்து வாழ்த்தினார்.
இந்தநிலையில், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு, போட்டியில் வெற்றி பெற்றவர் என்ற முறையில் மேடைக்கு அழைக்கப்பட்டார். அப்போது அண்ணாமலை அவருக்கு பதக்கத்தை கழுத்தில் அணிவிக்க முனைந்தபோதும், சூரிய ராஜபாலு அதை மறுத்து கையில் மட்டுமே பெற்றுக்கொண்டார். பின்னர் புகைப்படத்திற்காக மட்டுமே நின்றார்.
இந்த சம்பவம் காரணமாக சிறிது நேரம் மேடையில் பரபரப்பு ஏற்பட்டது.



Leave a Reply