அடடே ஸ்லிம் பேபியாக மாறிய குஷ்பூ குடும்பம்

Spread the love

உடல் எடையை குறைப்பது சாதாரண விஷயம் அல்ல. இதற்கு , நல்ல மனக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் , உணவுக்கட்டுப்பாடும் அவசியம். சிலர் உடல் எடையை குறைக்கிறேன் என்று சில நாட்கள் ஜிம்முக்கு போவார்கள். உணவுக்கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். பின்னர்,முயற்சியை கைவிட்டு விடுவார்கள். சுயக்கட்டுப்பாட்டுடன் ஒழுங்கும் இருந்தால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும். அந்த வகையில், நடிகை குஷ்பூ ஒரே ஆண்டில் 20 கிலோ எடையை குறைத்து வியப்பை ஏற்படுத்தினார்.நடிகை குஷ்பூ என்றாலே அவரது கொழு கொழு தோற்றம் தான் அனைவரின் நினைவுக்கும் வரும். அப்படி, வலம் வந்த குஷ்பூ, இப்போது அடையாளமே தெரியாமல் ஸ்லிம்மாக மாறி வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கடந்த சில வருடங்களாக குஷ்பூவுக்கு பல உடல் நல பிரச்சனைகள் இருந்தது. அவருக்கு முழங்காலில் பலமுறை அறுவைசிகிச்சையும் நடைபெற்றுள்ளது. இந்த சமயதில்தான், மருத்துவர்கள் உடல் எடையை குறைக்க வலியுறுத்தியுளளனர். அதனால் , எடை குறைப்பு முயற்சியில் குஷ்பூ ஈடுபட்டார். தொடர்ந்து , தனது நியூ லுக் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு பலரையும் மிரள வைத்திருந்தார்.

இருந்தாலும் நமது ரசிகர்கள் சந்தேகப் பேர்வழிகள் அல்லவா? ஊசி மூலம் உடல் எடையை குறைத்தீர்களா? என்றும் சிலர் அவரிடத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த குஷ்பூ, தினமும் காலை ஒரு மணி நேரம் உடற்பயிற்சியும், மாலை 45 முதல் 50 நிமிடங்கள் நடைபயிற்சியும் மேற்கொண்டேன். மாலை நடைபயிற்சி செய்ய முடியவில்லை என்றால் 1 மணி நேர உடற்பயிற்சியை கூடுதலாக செய்வேன். ஒழுக்கமான உணவுப்பழக்கம், நிலையான உடற்பயிற்சி முக்கியம் . செயற்கை முறையில் எடையை குறைக்காமல் இயற்கையாக உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மூலம் எடையை குறைத்தேன் என்று பதிலளித்தார்.

குஷ்பு – சுந்தர் சி தம்பதியருக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் பல திரைப்பட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளார்கள். குஷ்பூ தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தனது மகள்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பகிர்ந்தும் வருவார். இதனால், அவர்களை பலருக்கும் தெரியும். குஷ்பூவின் இரு மகள்களுமே தாயை விட அதிக குண்டாக இருப்பார்கள். இந்த விநாயகர் சதூர்த்தி தினத்தில் நடிகை குஷ்பூ இன்ஸ்டாவில் தனது குடும்ப புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதில், இரண்டு மகள்களும் தற்போது ஸ்லிம் ஆக மாறியுள்ளனர்.இதை கண்டு ரசிகர்கள் ஆச்சரியமும் வியப்பும் அடைந்தனர்.

நடிகை குஷ்பூவின் மகள்கள் இருவருமே, நீண்ட காலமாக சுயக்கட்டுப்பாடு, உணவுக்கட்டுப்பாடு, தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளனர். இருவரின் புகைப்படமும் சோசியல் மீடியாக்களில் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.