திருப்புவனம் இளைஞர் மரண வழக்கில் கைதான 5 போலீசாரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். மரண வழக்கு தொடர்பாக, அதிகாலை 4 மணி வரை ஆவணங்கள் தயார் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் 5 பேரையும் வேனில் ஏற்றி, திருப்புவனம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன் போலீசார் ஆஜர் செய்தனர். இதனையத்தொடர்ந்து 5 போலீசாரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அஜித்குமார் லாக் அப் மரணம் வழக்கு: கடும் உத்தரவு பிறப்பிப்போம் – ஐகோர்ட் எச்சரிக்கை

Leave a Reply