அசோசியேசன் ஆஃப் ஆல் டெக்ஸ்டைல் ப்ராசசர்ஸ்-ன் அவசரப் பொதுக்குழு கூட்டம்

Spread the love

அசோசியேசன் ஆஃப் ஆல் டெக்ஸ்டைல் ப்ராசசர்ஸ்-ன் அவசரப் பொதுக்குழு கூட்டம் சங்கு நகர் பிரிவு, பி.எஸ்.பி மஹாலில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சங்கத்தலைவர் ஏ. முருகேசன் தலைமை தாங்கினார் .செயலாளர் என்.. பழனிச்சாமி மற்றும் பொருளாளர் கே வீரக்குமார், கௌரத் தலைவர் பி.தேவராஜ், துணைத்தலைவர் ஆர்.. முருகானந்தம், இணைச் செயலாளர்கள் . டி. பெரியசாமி, கே.பி. சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில். மின்சார கட்டண உயர்வு, தொழிலாளர்களின் கூலி உயர்வு, கழிவு நீர் சுத்திகரிப்பு செலவினங்கள் அதிகரிப்பு மற்றும் விறகு, டைஸ் அன்ட் கெமிக்கல்ஸ் போன்ற மூலப்பொருட்களின் விலை உயர்வு ஆகிய தவிர்க்க முடியாத காரணங்களை கருத்தில் கொண்டு, தற்போது நடைமுறையில் உள்ள கூலியிலிருந்து சுமார் 20 சதவிகிதம் கூலியை உயர்த்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட, ஈரோடு, பவானி, குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.