திரைக்கலை உலகில் புதிதாக உருவாகும் படம் “டூரிஸ்ட் ஃபேமிலி”. இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சென்னையில் நடந்த இந்தப் படத்தின் புரோமோஷன் விழாவில் அனைவரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது.
விழா மேடையில் நின்ற இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், தனது நீண்டகால தோழி அகிலா இளங்கோவனை நோக்கி, மனம் திறந்தார். “ஆறாம் வகுப்பிலிருந்து நம்முடைய நட்பு ஆரம்பம். பத்தாம் வகுப்பிலிருந்து நெருங்கிய உறவாக மாறியது. என் வாழ்க்கையில் பலவேளைகளில் நான் பலகீனமடைந்த நேரங்களில் கூட என்னுடன் துணையாக இருந்தவள். இன்று நான் இங்கு நிற்பதற்கு என் தாயின் பங்கோடு இவளின் பங்கும் உள்ளது,” என்று உருக்கமாகப் பகிர்ந்தார்.
இதனைத் தொடர்ந்த அவர், “அக்டோபர் 31-ம் தேதி என்னை திருமணம் செய்துகொள்கிறாயா? I love you so much,” என்று மேடையிலேயே தெரிவித்தார்.
இந்த உருக்கமான நேரத்தின் வீடியோ, தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, ரசிகர்களின் மனங்களை வசீகரிக்கிறது.
Leave a Reply