,

அக்னி வெயில் தொடக்கம்- வெப்பநிலை அதிகரிக்கும????

Heat-Wave
Spread the love

தமிழகத்தில் நாளை முதல் அக்னி வெயில் தொடங்க இருப்பதால் மே 7 வரை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் மே 6 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனில் மே 7ல் நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனலும்  தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையின் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி வரை படிப்படியாக குறையக்கூடும். மே 6 வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.மே 5 வரை தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும்  இடையிடையே 65 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். இந்த நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.