பொள்ளாச்சியிலிருந்து 28 வது கி.மீ.தூரத்தில் கேரளாவில் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்
பாறை, அப்புப் பிள்ளையூர் என்னும் கிராமத்தில் வாழ்ந்து வந்த அகத்திய மகரிஷியின் சீடரே வெள்ளாடை சித்தர் ஆவார்.
சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு பல ஆன்மீகத் தலைவர்களை சந்தித்து வெள்ளாடை சித்தர் தமது உள்ளார்ந்த ஆன்மீக சந்தேகங்களை கேட்ட போது வடகரை சிவானந்த பரமஹம்ச சுவாமிகள் இவரது சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக வாசியோகத்தை தீட்சையாக அளித்தார். அதன்பிறகு,சில வருடங்களில் குறிப்பிட்ட ஆன்மீக தவநிலையை எட்டிய பின்னர், பழனிக்குச் சென்று 14 நாட்கள் அன்ன ஆகாரமின்றி தங்கியிருக்கிறார். அப்போது இவருக்கு போகர்
சித்தரின் தரிசனமும், நேரடி தீட்சையும் கிடைத்திருக்கிறது. அவரது தீட்சைக்குப்பின் தவத்தின் அடுத்த நிலையை எட்டியிருக்கிறார். பின்னர், அகத்திய மகரிஷி இருப்பதாக நம்பப்படும் பொதிகை மலைக்குச் சென்றிருக்கிறார். தனது தவ ஆற்றலாலும் தமது குரு அகத்தியரை தரிசிக்க வேண்டும் என்ற வேட்கையாலும் சரியான பாதையை அங்கே கண்டறிந்திருக்கிறார். சுமாராக இரண்டு கி.மீ.தூரத்துக்கு ஒரு இருண்ட குகை வழியாக ஊர்ந்தே பயணித்திருக்கிறார், அதன்பிறகு ஒரு கி.மீ.தூரத்துக்கு தவழ்ந்தே பயணித்திருக்கிறார். அந்த பயணத்தின் முடிவில் ஒரு பெரிய நீர்த்தடாகம் இருந்திருக்கிறது. அந்த நீர்த்தடாகத்தில் முதலை, பாம்பு முதலியன இருந்திருக்கின்றன. அந்த நீர்த்தடா கத்தின் மறுகரையில் அகத் திய மகரிஷி தமது சீடர்களுடன் தவம் செய்வதைப் பார்த்திருக்கிறார். அந்த கணத்தில் தமக்கு அருளிய அகத்தியரின் சீடரும், தமது இரண்டாவது குருவுமாகிய போகரை நினைத்து வேண்டியிருக்கிறார்.
மறுகணமே வெள்ளாடைச் சித்தர், அந்த நீர்த்தடாகத்தின் மறு முனைக்கு வந்துவிட்டார், அங்கே அகத்தியரின் சீடர் ஒருவர் இவரிடம் 1000 கேள்விகளை கேட்க, அதற்கு பதிலளித்திருக்கிறார். பிறகு, அந்த சீடர், அகத்திய மகரிஷி கண் விழித்துப் பார்க்கும் ஒரு மந்திரத்தை உபதேசித்திருக்கிறார். அந்த மந்திரத்தை வெள்ளாடை சித்தர் ஜபித்ததுமே, அகத்திய மகரிஷியின் அருட்பார்வை கிடைத்திருக்கிறது. பிறகு, உங்களோடு இருந்துவிடவே வந்திருக்கிறேன், தாங்கள் அருள வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அகத்திய மகரிஷி அவருக்கு என்று சில கடமைகள் உள்ளன என்று தாமே அங்கு வந்து அவரை சந்திப்பதாகவும் வரமளித்துள்ளார்.
அவர் திரும்பி வந்த இடமே இந்த அப்புப் பிள்ளையூர் ஆகும். திரும்பி வந்த வெள்ளாடை சித்தர் தமது குடும்பக் கடமைகளை நிறைவேற்றிவிட்டு, தமது 108 வது வயதில் ஜீவசமாதி ஆகியிருக்கிறார். இப்பொழுது திருக்கோயில் திருப்பணி நடைபெற்று வருகிறது. சுவாமிகளின் சீடர்களான முரளிதரன் மற்றும் அவர் நண்பர்க ளுடன், தங்களது உடல் உழைப்பையும், சிலர் தங்கள் சேமிப்பை கொடுத்தும், சிலர் வெளியில் கடனுதவி பெற்றும் இத்திருப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவரது 11வது குருபூஜை டிச. 13ம் தேதி, அப்புப்பிள்ளை யூரில் திருச்சிற்றம்பலம் சுவாமிகள் திருக்கோயிலில் நடைபெறுகிறது. இவ்விழா வில் கணபதி ஹோமம், அபிஷேகம், ருத்திரஹோ மம், 108 சங்காபிஷேகம், 1008 சகஸ்ர நாமாவளி, வெள்ளாடை சித்தருக்கு புஷ்பாங்சலி, திருவீதி உலா நடைபெறுகிறது.
Leave a Reply