கோவை பள்ளி மதிய உணவில் பல்லி: 3 பணியாளர்கள் பணியிடை நீக்கம்

Spread the love

கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்ததாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பாக பள்ளியின் மூன்று பணியாளர்களை மாவட்ட நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இந்த பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களில் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து 44 மாணவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அனைவரும் அதே நாளில் இரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் விசாரணை மேற்கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர், பள்ளியின் சமையலர் மனோகரி, உதவியாளர் கமலா மற்றும் சத்துணவு அமைப்பாளர் கௌசல்யா ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *